தெற்கு அமெரிக்காவில் இருந்து செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.!
சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மூன்று நாள் சுற்று பயணமாக தெற்கு அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டிற்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்றார். அங்கு இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் கலாச்சார நிகழ்வில் பங்கேற்று திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அதன் பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆப் தி எல்லோ ஸ்டார்’ எனும் விருது வழங்கப்பட்டது.
சுரினாம் பயணத்தை தொடர்ந்து இந்த விழாவில் இருந்து செர்பியா சுரினா நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு செர்பியா நாட்டிற்கு திரௌபதி முர்மு புறப்பட்டார். அங்கு ஜூன் 9ஆம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.