குஜராத் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்.!
குஜராத் சட்டசபையில் நிறைவேற்ற பட்டிருந்த சிஆர்பிசி 144-வது சட்ட பிரிவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையை அனுமதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டபிரிவு சிஆர்பிசி 144 சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதல் தற்போது பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்டப்பிரிவு 144 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை மீறுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 இன் கீழ் அறியக்கூடிய குற்றமாக பார்க்கப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக ஆறு மாத சிறைத்தண்டனை வரையில் விதிக்க அனுமதி அளிக்கிறது.