ஜனாதிபதி திரௌபதி முர்மு ஹைதராபாத் வந்தடைந்தார்..!

Murmu in Hyderabad

ஜனாதிபதி திரௌபதி முர்மு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் வந்தடைந்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஜூலை 3ம் தேதி முதல் தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பெங்களூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வந்தடைந்துள்ளார்.

செகந்திராபாத் வந்தடைந்த ஜனாதிபதியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் கே.சந்திரசேகர ராவ், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த பயணத்தில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லோரி சீதாராமராஜுவின் 125 வது பிறந்தநாள் நிறைவு விழாவில் ஜனாதிபதி உரையாபற்றி வருகிறார்.

அதன்பிறகு, இன்று மாலை ஹக்கிம்பேட் விமானப்படை நிலையத்தில் இருந்து நாக்பூர் செல்லவுள்ளார். மேலும் புதன்கிழமை, கோண்ட்வானா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதோடு, நாக்பூரில் உள்ள கோரடியில் உள்ள பாரதிய வித்யா பவனில் சமஸ்கிருதிக் கேந்திராவையும் அவர் திறந்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்