கொரோனா வைரஸால் அரசின் நெருக்கடி அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஓராண்டு சம்பளத்திலிருந்து 30 சதவிகிதத்தை அரசுக்கு கொடுக்க உள்ளார்.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் படியாகவும், நிவாரணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் மற்றும் அமைச்சர்கள் நிதி அளித்திருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்திருந்தார்.
தற்பொழுதும் அரசின் நெருக்கடி அறிந்து ஜனாதிபதி செய்த செயலுக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கையில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை, ஒரு வருடத்திற்கு விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
வெளியில் செல்லும் செலவை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆடம்பரமான போக்குவரத்து திட்டங்களை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், உள்நாட்டு செலவை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.அதன் மூலம் சமூக விதிமுறைகளை பேணலாம் எனவும் கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சிகள் விருந்து நிகழ்ச்சிகள் குறைக்கப்படும் எனவும், வருகைக்கான ஆட்களை குறைத்தே கூப்பிடபடும் எனவும், உணவு தேவைகளை குறைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…