பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இரங்கல்.!

Published by
கெளதம்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணத்தை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது என ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பிராணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்து அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் இருக்கிறார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்த நிலையில், தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.

இதை அறிந்த  குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், “முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணமடைந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது, பொது வாழ்க்கையில்  மகத்தான அவர் அன்னை இந்தியாவுக்கு சேவை செய்தார். தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இரங்கல் என ட்வீட் செய்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

4 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

5 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

6 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

8 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

9 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

9 hours ago