திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை 5:45 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் திருப்பதி செல்லும் வழியில் சென்னை வருகிறார். ஆனால் அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை என்றாலும், மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானம் நிற்கும் இடம், அவர் பயணம் செய்யவுள்ள விமானம் ஆகியவை முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் பழைய விமான நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை வந்த குடியரசு தலைவரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஆகியோர் வரவேற்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…