டெல்லியின் புதிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!
டெல்லி அமைச்சர்களாக அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை நியமனம் செய்தார் ஜனாதிபதி முர்மு.
மதுபான கொள்கை முறைகேடு:
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்.27 முதல் சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடிய திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பதவி ராஜினாமா:
இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கைதாகியுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதுபோன்று, ஹவாலா பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் ராஜினாமா செய்திருந்தார். இருவரின் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
புதிய அமைச்சர்கள்:
இதன்பின், டெல்லி முதல்வரின் ஆலோசனையின் பேரில், அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், டெல்லியில் புதிய அமைச்சர்களாக அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜை நியமிக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜனாதிபதி நியமனம்:
அதன்படி, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரை டெல்லி கேபினட் அமைச்சர்களாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அறிவிக்கப்பட்டுள்ளது.