மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மலர்த்தூவி மரியாதை.!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை.
தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.