பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து..!

பக்ரீத் பண்டிகை தினத்தையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் தினத்தையொட்டி ட்விட்டர் பக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் ஈத் முபாரக். பக்ரீத் பண்டிகை என்பது அன்பு மற்றும் தியாகத்துடன் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக இணைந்து செயல்படுவதற்கான விழா என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ஈத்-முபாரக். ஈத்-உல்-ஆதா தினத்திற்கு வாழ்த்துக்கள். இந்நாள் இரக்கம், தொண்டு, நல்லிணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும் தினமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!
March 17, 2025