ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு கட்டணத் திட்டத்தை 30 நாட்களுக்கு (அதாவது முழு மாதத்திற்கும்) செல்லுபடியாகும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என TRAI அறிவுறுத்தியுள்ளது.
முன்பு ப்ரீபெய்ட் பேக்குகள் 30 நாட்களுக்குக் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதை 28 நாட்களாக குறைத்தன. இதன் விளைவாக ஒரு வாடிக்கையாளர் வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சுமையாக மாறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நிறுவனமும் 30 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளைக் கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் திட்ட வவுச்சர், சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவை இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. டிராயின் புதிய முடிவு மொபைல் போன் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…