நீண்ட நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் செல்போன் சேவை

Default Image
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் சேவைகள்,இணையசேவைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது.
  • தடை செய்யப்பட்ட  சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று  காஷ்மீர் முதன்மை செயலர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.இது மட்டும் அல்லாது காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் அரசின்  முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த சட்டமும் அமலுக்கு வந்தது.காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஆனால் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வருவதற்கு முன்னரே மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டது.அதாவது அங்கு செல்போன் சேவைகள்,இணைய சேவைகள் ரத்து  செய்யப்பட்டது .144 தடை உத்தரவு மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு இடையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும்,இணையம் ,செல்போன் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தியதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.அந்தவகையில் தொலைபேசி,இணைய சேவைகளை திரும்ப வழங்ககோரிய வழக்கில் உச்சநீதிமன்றமும் 7 நாட்களில் இணைய சேவை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காஷ்மீர் முதன்மை செயலர் ரோகித் கன்சால் கூறுகையில்,காஷ்மீருக்கான சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டபோது தடை செய்யப்பட்ட  சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது ஜம்மு காஷ்மீரில் ப்ரீ -பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு செல்பேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவை இன்று முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு காஷ்மீர் பகுதியில் இந்த சேவைகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital