பிரேம் சிங் தாமங்: சிக்கிமில் 2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுடன் அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், நிலையில் அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
சிக்கிமில் மொத்தம் 32 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 31 இடங்களில் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் எஸ்கேஎம் (SKM) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநில முதல்வராக எஸ்கேஎம் கட்சித் தலைவரான பிரேம் சிங் தாமங் 2-வது முறையாக மீண்டும் சிக்கிம் முதல்வராக இன்று மாலை பதவி ஏற்றுள்ளார்.
அவர் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 30,000 பேர் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலை நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பதவியேற்கும் பிரேம் சிங்கிற்கும் புதிய அமைச்சர்களுக்கும் சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், சிக்கிமில் உள்ள 1 மக்களவைத் தொகுதியையும் நடைபெற்ற இந்த மக்களவை தேர்தலில், அதிலும் எஸ்கேஎம் கட்சி தான் வெற்றி பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…