கருவை சுமக்கும் போதே கர்ப்பிணி பெண்கள் ராமர், அனுமர், சத்ரபதி சிவாஜி பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை , இந்திய கலாச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் அறிந்து கொண்டு வளர்வார்கள். RSS கூட்டத்தில் மருத்துவர்கள் கருத்து.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவு சார்பில் நேற்று (ஞாயிற்று கிழமை) டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் 12 மாநிலங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அதில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் அறிவுரை : இதில் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக கருவிலேயே சிசுவுக்கு ஆன்மீக கருத்துக்களையும், கலாச்சாரத்தையும் கர்ப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
கருப்பை சுத்தப்படுத்துதல் : மருத்துவர்கள் கூறுகையில், ‘கர்ப்ப காலத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையை உணரும் நிமிடம், ஆயுர்வேதத்தின் பங்கு செயல்படுகிறது.’ என்று அவர் கூறினார் “கருப்பை சுத்தப்படுத்துதல்” ஒரு கர்ப்பகாலத்தில் ஒரு பகுதியாக உள்ளது. அந்த நேரத்தில் ஒரு பெண் சமஸ்கிருதம் படித்து, கீதாசாரம் படிக்க வேண்டும் என்றும் RSS குறிப்பிட்டனர். இதனை சரியாகச் செய்தால், குழந்தையின் டிஎன்ஏவைக் கூட கருப்பையில் மாற்ற முடியும் என்றும் அவர்கள் கூறினர்
இந்திய கலாச்சாரம் : கருவை சுமக்கும் போதே கர்ப்பிணி பெண்கள் ராமர், அனுமர், சத்ரபதி சிவாஜி பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை , இந்திய கலாச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் அறிந்து கொண்டு வளர்வார்கள் எனவும் அந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மருத்துவ நிபுணர்கள் கூறினார்.
ஓரின சேர்க்கையாளர் : மேலும், ‘தாய்க்கு ஏற்கனவே முதல் குழந்தையாக ஒரு மகன் இருந்து, இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்கும் என்று எதிர்பார்த்து, அந்த குழந்தை ஆண் குழந்தையாக பிறந்தால், அந்தக் குழந்தை ஓரினச்சேர்க்கையாளராக வளரக்கூடும் எனவும் ஒரு கருத்தை ஆர்எஸ்எஸ் டாக்டர் ஸ்வேதா டாங்ரே கூறினார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…