#BREAKING: கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை- உத்தரவை வாபஸ் பெற்ற SBI!
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வழிகாட்டுதலில், மூன்று மாத கர்ப்பிணி பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை SBI திரும்பப்பெற்றது.
நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தனது புதிதாக ஆட்சேர்ப்பு , பதவி உயர்வுகளுக்கான மருத்துவ உடற்தகுதி வழிகாட்டுதல்களில், 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி இருந்தாலும், அவர் தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருத வேண்டும்.
குழந்தை பெற்ற பிறகு 4 மாதங்கள் பிறகு தான் அவருக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தது. இந்த புதிய ஆணைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் அதிருப்தி தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். மேலும் பலர் பாரத ஸ்டேட் வங்கியின் செயலுக்கு தங்களது கண்டங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், கருவுற்ற 3 மாத பெண் பணி நியமனத்திற்கு தகுதி அற்றவர் என்ற உத்தரவை எஸ்.பி.ஐ திரும்பப்பெற்றது. எஸ்.பி.ஐ உத்தரவு அரசியல் சாசன பாலின சமத்துவத்துக்கு எதிரானது என கண்டனம் எழுந்த நிலையில் அந்த உத்தரவை எஸ்.பி.ஐ ரத்து செய்தது. கொரோனா காலகட்டத்தில், அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press release relating to news items about required fitness standards for recruitment in Bank. Revised instructions about recruitment of Pregnant Women candidates stands withdrawn.@DFS_India pic.twitter.com/QXqn3XSzKF
— State Bank of India (@TheOfficialSBI) January 29, 2022