கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு .. மரத்தடியில் நடந்த பிரசவம்.!
தெலுங்கானாவில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காததை அடுத்து மரத்தடியில் பிரசவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானாவில் உள்ள ஜங்கானில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டத்தை அடுத்து, மரத்தடியில் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணான ஷேக் பீ அவர்கள் தனது தாயார் பாத்திமா பீ உடன் காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஆரம்பத்திலிருந்தே கர்ப்பிணி பெண்ணை சிகிச்சை செய்து வந்த மருத்துவர், கர்ப்பிணி பெண்ணை வாரங்கலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார்.
ஆனால் ,ஆம்புலன்ஸ் இல்லாததால் மகள் மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரத்தின் கீழ் வைத்து ஒரு குழந்தையை பிரசவித்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து தான், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் தாயார் கூறியதாவது, தனது மகள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், அவர்கள் இரண்டு பேரின் தற்போதைய நிலை குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.