பிரசவத்திற்காக கூடையில் வைத்து கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்!
பிரசவத்திற்காக கூடையில் வைத்து கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்.
நாகரீகம் வளர்ந்த கட்டத்திலும், இன்றும் பல இடங்களில் சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு தான் வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள கோண்டகாவின் மோகன்பேடா கிராமத்தில் சாலைகள் இல்லாத நிலையில், ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு தற்காலிக கூடை மீது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த கர்ப்பிணி பெண்ணை சுகாதார பணியாளர்கள் சிலர் கூடையில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். அங்கு சாலி வசதிகள் இல்லாத காரணத்தால், அந்த கிராமத்திற்கு அம்புலன்ஸ் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொண்டகானின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டி.ஆர். கன்வார் அவர்கள் கூறுகையில், அவர்கள் 102 ஆம்புலன்ஸை வரவழைத்தார். அங்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் கிராமத்திற்குள் செல்ல இயலவில்லை. இதனையடுத்து அவருக்கு மாவட்ட மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.