பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரியை சரமாரியாக தாக்கிய மக்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆதிலாபாத் எனும் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியை அணுக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் பூசல காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் எனும் 42 வயதுடைய மந்திரவாதியிடம் சென்றுள்ளனர். அங்கு இவர் கடந்த சில வருடங்களாக பூஜை செய்து பேய் ஓட்டுவது, தீராத நோய்களை தீர்ப்பது போன்ற தன்னுடைய வித்தைகளை மக்களிடம் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். பலர் நம்பி அவரிடம் பூஜைக்கும் சென்று உள்ளனர். இந்நிலையில் 15 வயது மகளுக்கு பேய் பிடித்திருந்த தம்பதியினரும் அவரிடம் சென்றுள்ளனர். அவர் மூன்று மாதங்கள் பூஜை செய்து வந்தால் பேயை ஒரேடியாக விரட்டி விடலாம் என கூறியதை நம்பி அவர்களும் சம்மதம் தெரிவித்து தினமும் சிறுமியை மந்திரவாதியிடம் கூட்டி சென்றனர்.
அங்கு பூஜை செய்கிறார் என நம்பி தனியறையில் சிறுமியை விட்டு பூஜை முடிய சிறுமியை அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு மிகுந்த உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது மந்திரவாதி தினமும் தனக்கு தூக்க மாத்திரை கொடுத்து தன்னை பலாத்காரம் செய்வார் எனவும், ஆனால் அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் போலி மந்திரவாதி பிரசாதை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதோடு செருப்பு மற்றும் கற்களாலும் அடித்துள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மந்திரவாதி பிரசாத்தை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…