கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து கேரள அரசுக்கு விளக்கமளிக்ககோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது. அதுமட்டுமின்றி, யானை
மேலும் அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, மனிதாபிமானமற்ற முறையில், யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், ட்விட்டரில் RIP HUMANITY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதனையடுத்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் உறுதி அளித்தார்.
அதுமட்டுமின்றி, ஹியூமன்இ சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற தனியார் ,குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்கும் நபருக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்டும் என அறிவித்துள்ளது. மேலும், யானை உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …