உயிரிழந்த கர்ப்பிணி யானை..நடந்தது என்ன ? முழு விவரம்
கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து சிலா தகவல்கள் வந்துள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது. அதுமட்டுமின்றி, யானை
மேலும் அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரி ஏபிக்யூமை பேட்டி ஒன்றில் செய்தியாக வெளியிட்டார் .
அதில் அவர் கூறும்போது யானைக்கு யாரும் வெடிமருந்து கலந்த அன்னாசிப் பழங்களை கொடுக்கவில்லை என நினைக்கிறேன். பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை பசிக்காக யானை தின்றதாக தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களையும் தங்களது பயிர்களையும் பாதுகாக்கிறதுக்காக இது போன்ற செயல்களை செய்கின்றனர் என்று கூறினார்.
மேலும் அவர் சொன்னதில் விவசாயிகள் தங்கள் பயிர்களை பன்றிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள வளைகள் வைத்துள்ளனர் என்றும் இந்த வலையில் பன்றிகள் மட்டும் இல்லாமல் பிற விலங்குகளும் இதில் மாட்டிக்கொள்கிறது என்று தெரிவித்தார்.இழந்த கர்ப்பிணி பெண் யானை பாலக்காட்டில் உள்ள சைலன்ட் வேலி தேசிய பூங்காவில் இருந்து வந்துள்ளது.
யானைக்கு தற்போது 15 வயது உண்மையில் யானை இருந்தது அனைவருக்கும் பெரும் வழி கொடுத்தது யானைக்கு பரிசோதனை செய்த டாக்டர் டேவிட் கூறும்போது நான் 250க்கும் மேற்பட்ட யானைகள் பிரேத பரிசோதனை செய்துள்ளேன் ஆனால் முதல் முறையாக ஒரு இறந்த கர்ப்பிணி யானை குட்டியை கைகளில் எடுத்தபோது நான் நிலைகுலைத்து விட்டேன். முதலில் யாருமே கர்ப்பிணியாக இருப்பதை அறியவில்லை யானையின் இதயத்திலிருந்து அம்னோடிக் தீவிரம் வந்து போதுதான் நானே கர்ப்பமாக இருப்பதை அறிந்தோம்.
அதுமட்டுமின்றி, மனிதாபிமானமற்ற முறையில், யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், ட்விட்டரில் RIP HUMANITY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.