நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம்! பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!!
பிரதமர் மோடி : பிரதமர் நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம் என பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார். பிகாரின் நவாதா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி கால்களில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளானது.
இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது பற்றி பேசியுள்ளார். பாகல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களை சந்தித்த அவர் ” நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று பேசி வருகிறார்கள். இப்படியான சூழலில், நிதிஷ் குமார், தன்னுடைய செல்வாக்கை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கிறன்.
அவர் பிகார் மாநிலத்துடைய நன்மைக்காக, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. வருகின்ற 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மோடியின் பாஜக கட்சி ஆதரவோடு வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக தான் செல்வாக்கை பயன்படுத்துகிறார். அதன் காரணமாக தான் நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்தார். இது பிகாருக்கு அவமானம் தான்” எனவும் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.