5 முறைசெல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்கிறது பிரசாந்த் கிஷோர்..!

Default Image

5 முறை போனை மாற்றிவிட்டேன், இருந்தபோதிலும் பயனில்லை ஹேக் செய்வது தொடர்கிறது  என அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியர்களை  உளவுப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியாவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து என்.டி.டிவிக்கு பேசிய பிரசாந்த் கிஷோர், என் போனை 5 முறை மாற்றிவிட்டேன். இருந்தபோதிலும் பயனில்லை. ஹேக் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2017 லிருந்து 2021 வரை எனது போனை யாரோ ஒட்டுக்கேட்கிறார்கள் என சந்தேகம் இருந்தது. ஆனால் ஹேக் செய்கிறார்கள் என்று உணர முடியவில்லை என கூறினார்.

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்காகப் பணியாற்றத் தொடங்கியதிலிருந்தே அவரது தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வர முக்கிய பங்கு உண்டு.

பின்னர், அமித் ஷாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரசாந்த் கிஷோர் பாஜகவுடனான தொடர்பை முறித்து கொண்டார். இப்போது பாஜக எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் உத்திகளை வழங்கி வருகிறார். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூலும், தமிழகத்தில் திமுகவும் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் வியூகம் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது செல்போனை ஹேக் செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறுகிறார். இருப்பினும், இந்த விஷயத்தில் மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், மோடி அரசு சட்டத்தையும் அரசியலமைப்பையும் கொன்று வருகிறது. மத்திய அரசு தேசத் துரோகத்தைச் செய்துள்ளது. தேசிய பாதுகாப்புடன் விளையாடியது என கூறினார். ஆனால், இந்த குற்றசாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

என்எஸ்ஓ குழுமம் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளது. பல நாடுகளில் இதை விற்பனை செய்துள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை கண்காணிக்கக்கூடிய மென்பொருள். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் ஊடுருவி தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோனில் இருக்கும் ‘BUG’ மூலம் அல்லது லிங் எதையாவது கிளிக் செய்வதன் மூலம்  பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே நுழைந்து விடும். போனில் பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்கவும், மெசேஜ்களைப் படிக்கவும், கேமரா மற்றும் மைக்கை அவருக்கு தெரியாமலேயே இயக்கவும் முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்