உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.அதன்படி அன்று நீதிபதிகள், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், அது பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்தனர்.
மேலும், அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு 2 நாள் அவகாசம் அளித்தது.ஆனால் அவகாசம் முடிந்த நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.பின்னர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையை அறிவித்தது உச்சநீதிமன்றம். அதன்படி,நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதன் பின்னர் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், நீதிமன்ற தீர்ப்பையடுத்து தனது மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் பங்களிப்புடன் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டதாக பதிவிட்டார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.அப்பொழுது அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவும் தாக்கல் செய்ய உள்ளேன்.உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…