தேசத்தின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லிக்கு நன்றி…!!வாழ்த்துக்கள் கெஜிரி…பாஜகவின் வியூகத்தை உடைத்து எரிந்த பிரசாந்த் கிஷோர் வாழ்த்து
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள மக்களுக்கு நன்றி என்று அக்கட்சிக்காக அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது.இந்நிலையில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில்டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் அக்கட்சிக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர், அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் வல்லவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர்.இவரே இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற, டெல்லிக்கு நன்றி என பதிவிட்டு கூறிள்ளார்.
Thank you Delhi for standing up to protect the soul of India!
— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020
இந்நிலையில் தான் டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கும் நேரில் சென்ற பிரசாந்த் கிஷோர் மீண்டும் 3 வது முறையாக முதல்வராக உள்ள கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது