பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது – அபிஜித் முகர்ஜி.!

Default Image

கடந்த வாரம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கடந்த 10-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார்.  பிரணாப் முகர்ஜிக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது என அவர் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவர்களின் தீவிரமான முயற்சியால், என் தந்தையின் உடல் உறுப்புகள் சீராக உள்ளது. இதனால், என் தந்தையின்  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
uttar pradesh
Vikram sj suriya
ab de villiers DHONI
d jeyakumar admk
Minister Thangam Thennarasu - ADMK Chief secretary Edappadi Palanisamy
rain tamilnadu