பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு.!
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம்.
கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 7-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசு கட்டங்களில் தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசுப்பூர்வ மரியாதை செலுத்தும் நிகழ்வு, எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.