பிரணாப் முகர்ஜி தொடர் கோமாவில் உள்ளார் – ராணுவ மருத்துவமனை.!

பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா மற்றும் வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பிராணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்து வருகிற நிலையில், சமீபத்தில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது சிறுநீரக செயல்பாடுகள் சற்று குறைந்து விட்டதாகவும் அவர் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார். மேலும், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025