கோவா முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார்.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
முதல்வர் பதவியேற்பு விழா:
இந்நிலையில்,கோவா முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார்.இந்த பதவியேற்பு விழாவானது கோவா பனாஜி அருகே உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
கருப்பு முகக்கவசம் அல்லது கருப்பு ஆடை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை:
குறிப்பாக,இப்பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதனிடையே,இப்பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்குள் கருப்பு முகக்கவசம் அல்லது கருப்பு ஆடை அணிந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்துள்ளார்.
2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு:
கோவா முதல்வராக பதவியேற்க உள்ள பிரமோத் சாவந்த் பதவியேற்பு விழாவை முன்னிட்டு கோவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,ட்ரோன்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.மேலும்,ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.கோவாவில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…