சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் ராஷ்டிரிய ஆதிவாசி நிர்த்திய உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவில் வன்முறை அதிகரித்து விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருகிறது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, இந்தியா பின்னோக்கி செல்கிறது’ என கடுமையாக சாடினார்.
மேலும், ‘என்.பி.ஆர், என்.ஆர்.சி, பணமதிப்பிழப்பு ஆகியவை ஏழைகள் மீதான வரி தாக்குதல். இதே நிலை நீடித்தால் எப்படி வேலை கிடைக்கும்.’ என மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , ‘டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினை காங்கிரஸ் நடத்துவது நாட்டை உறுதியற்ற தன்மை நிலை இருப்பதாக காட்ட முயற்சிக்கிறது. என குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய குடியுரிமைச் சட்டம், என்.பி.ஆர்திட்டங்களில் மக்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என்று தெரிவித்தார். என்.பி.ஆர் கணக்கெடுப்பு மூலம் ஏழை மக்களை அடையாளம் காண முடியும். என விளக்கமளித்தார். இந்த திட்டம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். எனவும் அவர் கூறினார். 2010ஆம் ஆண்டு இது போன்று பதிவேடு காங்கிரஸ் கட்சியில் கணக்கெடுக்கப்பட்டது என்றும், ராகுல் பொய்களையே பேசுவார். என்றும் குற்றம்சாட்டினார். மேலும், 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி தான் எனவும் விமர்சித்து தனது பதிலடியை கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி பாஜக கொண்டுவரும் திட்டங்களை புரிந்து கொள்ள முடியாது எனவும் கூறினார்.
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா…
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…