பாஜக செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும்.! நிர்மலா சீதாராமன் கணவர் கடும் விமர்சனம்.!
2024 தேர்தலில் தோற்றாலும் பாஜக செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.
The Crooked Timber of New India – Essays on a Republic in Crisis எனும் புத்தகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும், பொருளாதார நிபுணருமான பிரகலா பிரபாகர் எழுதியிருந்தார். இந்த புத்தகம் மீதான கலந்துரையாடல் அண்மையில் சென்னையில் தனியார் பத்திரிக்கை மூலம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
அதில், மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்தில் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (Multidimensional Poverty Index -MPI) அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 2015-16 மற்றும் 2019-21 க்கு இடைப்பட்ட காலத்தில் 13.5 கோடி மக்கள் பல்வேறு பரிமாணம வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர் என குறிப்பிடப்பட்ள்ளதை பிரகலா பிரபாகர் விமர்சித்தார்.
வருமான உயர்வை மட்டுமே மத்திய அரசு கணக்கில் கொண்டுள்ளது. ஆனால், மற்ற காரணிகளான சுகாதாரம், மக்களின் நிலை ஆகியவற்றை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என விமர்சித்தார். இருந்தாலும், வருமானத் தரவுகளும் எந்தவித ஏற்றமும் இல்லாமல் இருப்பதாக பிரகலா பிரபாகர் விமர்சித்து உள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் ஆனது கொரோனாவுக்கு முன்னர் உள்ள நிலையை கூட இன்னும் நாடு திரும்பவில்லை. இப்படியான சூழலில் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டதாக கூறுவது எப்படி சரியாகும்? வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்றாலும் கூட பாஜக செலுத்திய விஷத்தை நாட்டில் இருந்து அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என மத்திய நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.