கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு -மக்களவையில் மன்னிப்பு கேட்டார் பாஜக எம்.பி. பிரக்யா
பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் சர்ச்சைக்கு பெயர்போனவர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறினார்.இவர் இவ்வாறு கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தான் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்களவையில் மீண்டும் கோட்சே குறித்த கருத்தை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த பேசுகையில்,32 ஆண்டுகளாக காந்தியின் மீது வஞ்சம் வைத்திருந்தேன் என்று காந்தியை கொன்ற கேட்சே தெரிவித்ததாக கூறினார் ராசா.இந்த வேளையில் தான் பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் குறுக்கிட்டு பேசினார்.அவர் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் நிலவியது.ஏற்கனவே அவர் கூறிய நிலையில் மீண்டும் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரக்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று கோட்சேவை தேச பக்தர் என கூறியது தொடர்பாக மக்களவையில் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங் தாக்கூர்.ஆனால் பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரக்யாவை அவையை விட்டு வெளியேறும்படி கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.