உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா – பிரதமர் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!
உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘இளம் மேதை ஆர் பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். புகழ்பெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றதற்காக பெருமைப்படுகிறோம். திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
We are all rejoicing on the success of the young genius R Praggnanandhaa. Proud of his accomplishment of winning against the noted champion Magnus Carlsen. I wish the talented Praggnanandhaa the very best for his future endeavours. @rpragchess
— Narendra Modi (@narendramodi) February 23, 2022