ஜன் தன் யோஜனா கணக்கில் இன்று முதல் ரூ.500 டெபாசிட்..!
இன்று முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட் தொடங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைத்ததை அடுத்து (மக்கள் நிதி திட்டம்) என்ற பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டம் ஆனது தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண நிதியாக ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என்று அண்மையில் மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் முதற்கட்டமாக ரூ.500ஐ பயனாளிகள் கணக்குகளில் இருப்பு வைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
அதன்படி பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற எண்ணில் முடியும் வங்கி கணக்கு எண்ணிற்கு எல்லாம் ரூ.500 இன்று வங்கியில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல வங்கி கணக்கு எண் இறுதியில் 2 அல்லது 3 என்று இருந்தால் அவர்களுக்கு (நாளை)ஏப்., 4ம் தேதி பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும், வங்கி கணக்கு எண் 4 அல்லது 5 என்ற எண்களில் முடிந்தால் ஏப்.,7-ம் தேதி பணம் செலுத்தப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வங்கி கணக்கு எண்களின் இறுதியில் 6 அல்லது 7 என்ற எண்கள் இருந்தால் ஏப்.,8ம் தேதியும், 8 அல்லது 9 என்ற எண்கள் இருந்தால் ஏப்.,9ம் தேதியும் பணம் செய்யப்படும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது
இதனைத் தொடந்து வங்கி ஊழியர்கள் சங்கம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை தற்போது விடுத்துள்ளது.
அதில் மத்திய அரசு அளிக்கும் 500 ரூபாயானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் இதனை எடுக்க யாரும் அவசரம் காட்ட வேண்டாம் கொரோனா தாக்கம் தணிந்த பின்னர் கூட பயனாளிகள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.மேலும் இந்த விவகாரத்தில் வங்கிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் பயனாளிகள் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரி உள்ளது.ஒரு வேளை மிக அவசரத் தேவையாக ஜன் தன் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு பணம் தேவைப்பட்டால் ரூ பே கார்டு மூலம் எந்த ஏடிஎம் களில் வேண்டுமானாலும் ரூ.500 ஐ எடுத்துக்கொள்ளலாம் என்று அதற்கு எந்த கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.