புத்தாண்டில் பெங்களூரு தொழிலதிபர் தற்கொலை.! பாஜக எம்எல்ஏ-வுக்கு தொடர்பா.?
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் என்பவர் நேற்று புத்தாண்டு அன்று தனது காருக்குள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுகொன்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்த 47வயது தொழிலதிபர் பிரதீப் என்பவர் நேற்று புத்தாண்டு மாலை 5 மணியளவில் பெங்களூரு புறநகர் பகுதியில் தனது காருக்குள் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த தற்கொலை சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொழிலதிபர் பிரதீப் தனது தற்கொலை குறிப்பேட்டில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி உட்பட மேலும் 5 பேர் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு 1.5 கோடிரூபாய் முதலீடு செய்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தன்னை பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி தன்னை நம்பவில்லை எனவும் தொழிலதிபர் பிரதீப் அந்த குறிப்பிட்டில் குறிப்பிட்டுள்ளார். பிரதீப் எழுதிய குறிப்பேட்டை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளனர்.