PPF திட்டம்: ஒவ்வொரு ஆண்டும் ரூ 1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்திற்காக ரூ 1.5 கோடியை சேமிக்க முடியும்..

பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடுகள் வலுவான, வரி இல்லாத ஓய்வூதிய நிதிகளை உருவாக்குவதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும்.

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் , மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் முதலீட்டுக்களை விட பிபிஎஃப் சிறந்ததாக இருக்கிறது. பிபிஎஃப் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு-சேமிப்புத் திட்டமாகும். இது பல வரிச் சலுகைகள், விலக்குகள் மற்றும் மூலதனப் பாதுகாப்பின் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஈட்டப்படும் வட்டி மற்றும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.

பிபிஎஃப் தோட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடுகள் முறையே 500 மற்றும் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்யவேண்டும். இத்திட்டத்தின் தற்போதைய வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதம் மற்றும் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகைகள் வருடாந்திர வரி விலக்குக்குத் தகுதி பெறுகின்றன.

நீங்கள் 25 முதல் 30 வயதுக்குள் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கி, 5 ஆண்டுகள் வரை மூன்று முறை நீட்டித்தால், ஓய்வு பெறுவதற்கு முன் முதலீட்டை எளிதாக அதிகரிக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதம் மாறாமல் இருந்தால், 30 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.1.54 கோடி கிடைக்கும். மொத்த முதலீட்டு தொகையான  ரூ. 45 லட்சத்திற்கு ரூ. 1.09 கோடி திரட்டப்பட்ட வட்டியாக வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்