லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் 4.3 ஆக பதிவு..!
லடாக்கின் லே (Leh) பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியான லடாக்கின் லே (Leh) நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
காலை 10:47 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லடாக்கின் லே (Leh) பகுதிக்கு வடக்கே 166 கிமீ தொலைவில் 105 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.