கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் – உச்ச நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு.!

SC- mineral rights

டெல்லி : கனிம உரிமைகள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் வரம்புக்குட்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், “சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை.

அரசியலமைப்பின் 246வது பிரிவின் கீழ், மாநில சட்டமன்றங்களே அதற்கு வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெறுகின்றன” என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 2011 இல் இந்த விவகாரம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், நிறுவப்பட்ட புதிய சட்டக் கட்டமைப்பிற்கு இணங்குவதை உறுதிசெய்து, இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தொடருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மீது, இதுவரை மத்திய அரசு விதித்துள்ள வரியை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கை ஜூலை 31ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்