புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14-ல் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தனர். தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக தமிழக்கத்தில் இரண்டு முறை பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்..
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…