#Breaking: மகாராஷ்டிராவில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வுகள் ஒத்திவைப்பு- அரசு அதிரடி!

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 63,000- மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு, உட்பட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.