அதிகரிக்கும் கொரோனா.. குஜராத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!
குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 7,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே நாளில் 73 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கு படுக்கை வசதியின்றி தத்தளித்து வரும் சொல்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி “ஆல் பாஸ்” என்றும் அம்மாநில அரசுஅறிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.