UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு.! ஜிதேந்தர் சிங் அதிரடி.!
UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடம் இடங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் 9 -ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதையெடுத்து , UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், மே 3-ம் தேதிக்கு பிறகு புதிய தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.