பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்துள்ளது.
தமிழில் உயிரின் உயிரே ,அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி,நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார்.
அதன் பின்பு,இரவு 10:30 மணியளவில் அவர் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CMRI) கொண்டு செல்லப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனனர். இந்நிலையில், கேகேவின் குடும்பத்தினர் தற்போது கொல்கத்தா வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து பாடகர் கேகே மரணம் தொடர்பாக நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறான மரணம் இல்லை என்று வெளிவந்துள்ளது. மேலும், பாடகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு நாள்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…