நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது …!
நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
260 நகரங்களில் 800 மையங்களில் CBT முறையில் நடத்தப்படும் தேர்வை 1.74 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நாளை இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.