குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் ஆரம்பித்து தற்போது பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கையை வலியுறுத்திக் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மேலாடை இன்றி நேற்று பேரணியாக சென்றனர்.அப்போது போலீசார் மிருகத்தனமாக தாக்கியது. தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
டெல்லி மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் , புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என கூறி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை காணவில்லை என பாட்னாவில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் காது கேட்காத , வாய் பேச முடியாத ,கண்பார்வையற்ற பீகார் முதலமைச்சர் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களுக்கு ஜனதா தளம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…