நாட்டை காப்பாற்றுங்கள்… டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள்.! 6 பேர் கைது.!
டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக 36 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
டெல்லி மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அதில் மோடியை நாட்டில் இருந்து விலக்கி நாட்டை காப்பாற்றுங்கள் என ஹிந்தியில் எழுதப்பட்டு இருந்துள்ளது.
சர்ச்சை போஸ்டர்கள் :
இந்த சர்ச்சைக்குள்ள சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக இதுவரையில் 36 எப்ஐஆர் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேடுதல் வேட்டை :
மேலும், இந்த சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகம் , யார் அச்சிட கூறினார்கள் என்ற விவரம் இன்னும் முழுதாக தெரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுவரொட்டிகள் அடங்கிய ஒரு வேன் டெல்லியில் பிரதான கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது போலீசார் மடக்கி பிடித்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.