#LIVE: உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் – ஆணையர் சுஷில் சந்திரா..!

Published by
murugan

உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைப்பெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா,

  • தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரவை ஆயுட்காலம் மார்ச் 15 முதல் மே 14-க்குள் முடிவடைகிறது.
  • 5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள்
  • அவர்களில் 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள்
  • ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு
  • வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் கொரோனா பரவாமல் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • கோவா, மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்த முறை தேர்தல் நடைபெறும்
  • உத்தரபிரதேசம் 403 தொகுதிகளையும், பஞ்சாப் 117 தொகுதிகளையும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளையும், மணிப்பூர் 60 தொகுதிகளையும், கோவா 40 தொகுதிகளையும் கொண்டது.
  • 5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு
  • சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
  • தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகளை பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளிக்க முன்வரவேண்டும்.
  • இ- விஜில் என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
  • மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும்.
  • வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.
  • வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்
  • ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம்.
  • தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • தேர்தல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக வகைப்படுத்தப்படுகின்றன இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் போட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பதட்டம் நிறைந்த வாக்கு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.
  • தேர்தலை காரணம் காட்டி, மதுவோ அல்லது பணமோ அன்பளிப்பாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்தலை தள்ளிவைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
  • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வேட்பாளர்கள் என்றவரை டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.
  • 5 மாநில தேர்தலில் வாக்களிக்க நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு.
  • ஜனவரி 15 வரை தேர்தல் தொடர்பான எந்த பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது.
  • நடைப்பயணம், சைக்கிள் பேரணி ஆகியவற்றிற்கு ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.
  • தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது.
Published by
murugan

Recent Posts

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

32 seconds ago

விறுவிறு வாக்குப்பதிவு : வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடக்கம்.!

டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…

36 mins ago

தொடர் கனமழை : பெரம்பலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…

57 mins ago

கனமழை எதிரொலி : இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

12 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

12 hours ago