கர்நாடக தேர்தல் வாக்கு எண்னிக்கை : தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்.!

karnataka election

கர்நாடகாவில் முதற்கட்டமாக தபால் வாக்குக்கள் எண்ணப்பட்டு வருகின்றன .

கடந்த 10ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று எனப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என அறிவித்த நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மொத்தமாக 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக வீட்டில் இருந்து வாக்களித்த முதியவர்களின் வாக்குகள் மற்றும் அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரை 67 தொகுதிகளில் பாஜகவும், 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன. மதசார்பற்ற ஜனதா தளம் 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்