செப்டம்பர் 15-ம் தேதி நடக்கிறது அஞ்சல் துறை தேர்வு

Published by
Venu

அஞ்சல் துறை தேர்வு நாடு முழுவதும்  செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று  மத்திய அரசு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

ஆனாலும்  அஞ்சல் துறை தேர்வு  ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது.ஆனால்  மாநிலங்களவையில் அஞ்சல்  துறை தேர்வு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக – திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர் . இதன் பின்னர் அவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும்  தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடக்கும் என உறுதி அளித்தார்.

இந்த நிலையில் ரத்தான  அஞ்சல் துறை தேர்வு நாடு முழுவதும்  செப்டம்பர் 15-ம் தேதி நடக்கிறது என்று அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

18 minutes ago

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

34 minutes ago

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…

48 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல்.. நாதகவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நோட்டா.!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…

1 hour ago

விராட் வெளியே., ஸ்ரேயாஸ் உள்ளே! இது கடவுளின் விருப்பம்! ஹர்பஜன் சிங் கருத்து!

ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…

1 hour ago

ஒரு கேப்டனாக பாடம் கற்றுக்கொண்ட ரஷீத் கான்… தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க இணைய தொடர்.!

ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…

2 hours ago