குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் 19 வயது தலித் இளம்பெண் ஆவார்.இவர் கடந்த மாதம் 31-ம் தேதி காணாமல் சென்றுள்ளார்.இதன் காரணமாக பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரில் தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் உள்ள இளைஞருடன் பழக்கம் உள்ளதால் அவருடன் திருமணம் செய்திருக்கலாம் என்ற எண்ணத்தில் புகாரை மறுத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.இதனை அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர் பிரேத பரிசோதனையில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிமல், தர்ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் என்ற நான்கு பேர் பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகிய அந்த நான்கு இளைஞர்களையும் காவல்துறையினர் தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…