கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்ட முதுகலை பட்டதாரி பெண்..!

Default Image

கிருஷ்ணன் மீது கொண்ட பற்றால் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட பெண். 

ஓய்வு பெற்ற ஆசிரியரும், அவுரையா மாவட்டத்தின் பிதுனாவில் உள்ள பர்தானா சாலையில் வசிப்பவருமான ரஞ்சித் சிங் சோலங்கியின் மகளான ரக்ஷா, முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து எல்எல்பி படித்து வருகிறார்.

கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்ட பெண் 

இவர் கிருஷ்ணன் மீது அதிக பக்தி கொண்டவர். இந்த நிலையில், இவர் கிருஷ்ணரை திருமணம் செய்து, தனது வாழ்நாளை அவருடனே கழித்து விடலாம் என முடிவு செய்துள்ளார்.

அவளது தந்தை, கிருஷ்ணரைத் திருமணம் செய்துகொள்ளும் அவளது விருப்பத்தை நிறைவேற்றி, விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் இசையும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரே இரவில் நடந்த திருமணத்திற்குப் பிறகு, மணமகள் கிருஷ்ணர் சிலையுடன் மாவட்டத்தின் சுக்செயின்பூர் பகுதியில் உள்ள தனது உறவினர்களின் வீட்டிற்கு புறப்பட்டார்.

பிருந்தாவனத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் 

இதுகுறித்து குடும்ப உறுப்பினர்கள்கூறுபடி, ‘அவர் ஜூலை 2022 இல் தனது பெற்றோரிடம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். பின்னர் அவரது பெற்றோர் அவரை ஜூலை மாதம் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 இரண்டுமுறை மாலையணிவித்த கிருஷ்ணர் 

இதுகுறித்து ரக்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவயதில் இருந்தே கிருஷ்ணருடன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். அவரை பற்றி நீண்ட நாளாக கனவு கண்டு கொண்டிருந்தேன். கனவில் இரண்டு முறை, கிருஷ்ணர் எனக்கு மாலை அணிவித்தார் என்று அவர் கூறினார்.

ரக்ஷாவின் மூத்த சகோதரி அனுராதா கூறுகையில், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் தனது சகோதரி கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்டார்.
எல்லோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். ரக்ஷா பகவான் கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவர் இப்போது எங்கள் உறவினராகவும் ஆகிவிட்டார். கிருஷ்ணரின் அருளால் எல்லாம் நடக்கிறது என்று அனுராதா மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்