உரிய ஆவணங்கள் இன்றி நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் போக்குவரத்து காவல்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது சந்தை மதிப்பில் சுமார் 2 கோடி மதிப்பிலான Porsche 911 என்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அகமதாபாத் போக்குவரத்து காவல்த்துறை துணை ஆணையர் அஜித் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உரிய ஆவணங்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிவந்த Porsche 911 என்ற சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.சம்பவ இடத்தில் இந்த காருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.இதனால் காரை போக்குவரத்து வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தோம்.அவர் மேற்கொண்ட ஆய்வில் ,காருக்கு இன்சூரன்ஸ் எதுவும் செய்யப்படவில்லை மற்றும் சாலை வரியும் கட்டவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.மேலும் இதன் உரிமையாளர் அபராதத் தொகை கட்டியதும் கார் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த காரின் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…